என் கணவருக்கு ஒர் அன்பு மடல்
எத்தனை உறவுகள் என் அருகில் இருந்தாலும் என் மனம் தேடுவது உங்களைத்தான். அழகான நேரமதையும், நீங்கள் தான் கொடுத்தீர்கள். அழியாத சோகத்தையும் நீங்கள் தான் கொடுத்தீர்கள். பிரிவின் வலி நீங்குவதற்கு முன் சேர்ந்து கொள்வோம். அதுவே பழகிப்போனால் பின் நிரந்தரமாகி விடும். இந்த உலகமே நீங்கள் தான் என்று இருந்தேன். எங்களை பிரித்த இறைவன் வெகு விரைவில் சேர்ப்பார் . அது மட்டும் நீங்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர என்னால் இயன்றவரை முயன்று வருகிறேன். நீங்கள் சொல்லுவீர்கள் வடக்கும், கிழக்கும் என் இரு கண்கள் என்று . அதை என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் என்னை முன்னின்று வழி நடத்துவது என் கண்முன் தெரிகிறது. நான் உயிர் வாழ்ந்து கொண்டு இருப்பது, நீங்கள் எனக்குத் தந்த சுதந்திரமும், ஆளுமையும் தான் . இவை என்றும் என்னை வழிநடத்தும் . எனது காலம்வரை நீங்கள் என்னை வசந்தா என்று அழைக்கும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கின்றது, இன்னும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் . என்றும் ஒவ்வொரு கணமும் உங்களைத் தேடும் வசந்தா.♥️