Thanks

பிரேம் அறக்கட்டளைக்கு உங்கள் சிந்தனைமிக்க நன்கொடைக்கு நன்றி

1.கடந்த வருடங்களாக மதுரா குடும்பத்தினரும் S.K.T ராம் குடும்பத்தினரும் தங்கள் கோயில் திருவிழா உடுப்புகளையும் தனிப்பட்ட முறையில் சேர்த்த உடுப்புகளையும் அமரர் பிரேமச்சந்திரா இருந்த காலந்தொட்டு இன்றுவரையும் தந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த உடுப்புகளை நான் இலங்கைக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றேன். இவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் பிரேம் அறக்கட்டளை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

2.உமாவும் செல்வமும் 20 வருடங்களாக உடுப்புகள் சேர்த்து தந்துகொண்டிருக்கிறார்கள் அவற்றையும் நான் இலங்கைக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றேன். இவர்கள் இருவருக்கும் பிரேம் அறக்கட்டளை சார்பில் நன்றிகளைக் கூறுகின்றேன்.

3. உமா ஊடாக ரவீந்திரன் ஜயாவும் புதுச்சேலைகளும் பிள்ளைகளின் உடுப்புகளும் சேகரித்த உடுப்புகளும் தந்துள்ளார்கள். அவர்களுக்கும் பிரேம் அறக்கட்டளை மூலம நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4. 04- 11 – 22 வெள்ளிக்கிழமை குணாசுதன் தனது மகன் நேயனின் பிறந்தநாள் அன்று பிறேம் அறக்கட்டளையில் உள்ள பிள்ளைகளுக்கு கேக் நூடில்ஸ் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் பிரேம் அறக்கட்டளை காணியில் 20 தென்னம்பிள்ளைகளும் 30 கமுகமரங்களும் பிறந்தநாள் நினைவாக நடப்பட்டது. பாடசாலைக்கு ஒழுங்காக வந்த முதல் மூன்று பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இத்துடன் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

5. பத்மபிரசாந் பிரதீபா தம்பதிகளின் மகள் யதர்வா தனது முதலாவது பிறந்த தினத்தை 08 – 11 – 21 அன்று லண்டனில் கொண்டாடினார். இதனையொட்டி அறக்கட்டளைப் பிள்ளைகளுக்கு உணவு வழங்கியும்  சில மரக்கன்றுகள் நாட்டியும் மைக்றோ போன், லப்ரொப் கவரும் அறக்கட்டளைக்கு வழங்கினார்கள். இவர்களுக்கும் அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

6. அமரர் பிரேமச்சந்திரா அவர்கள் வாழ்ந்த காலத்தில் கணணி வகுப்புகள் நடைபெற்றன. அக்காலத்தில் பாவித்த கணணிகள் பிழையான வழியில் கை மாற்றப்பட்டது. இன்று அவை எம்மிடம் இல்லாததினால் புதிய கணணிகள் வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நல்ல உள்ளங்கள் உள்ள ஒரு சிலர் கணணிகள் ஏழு வாங்கித்தந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து தர்மபுரம் அனுப்பும் செலவுகளையும் அவர்கள் ஏற்றுள்ளனர். அவர்களின்பெயர்கள் பின்வருமாறு
1. சிவநேசராசா சுமதி குடும்பத்தினர் – நோர்வே – 4
2. திருமதி :பாலஸ்ரீ ரவீந்திரகுமார் Mrs :BALASRI RAVEENDRAKUMAR – கனடா – 3

7. யாழ்ப்பாணத்தில் உள்ள திரு பிரதீபன் அவர்களும் அவர் நண்பர் திரு தனுசன் அவர்களும் எமது அறக்கட்டளையில் உள்ள கணணிகள் பழுதடையும் வேளையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தர்மபுரம் அறக்கட்டளைக்கு வந்து கணணிகளைத் திருத்தித்தருவதாக வாக்குறுதி தந்துள்ளார்கள். அவர்கள் வந்து போகும் செலவை நாங்கள் கொடுப்பதாக வாக்குக் கொடுத்துள்ளோம்.

8. யோகராசா சரோஜினி கேப்பப்பிளவு (Kepapilavu) முள்ளியவளையில் வசிக்கும் குடும்பத்தினரின் மகளின் இதய அறுவைச் சிகிச்சைக்காக குணாசுதன் அவர்கள் ரூபா 15 000 பிரேம் அறக்கட்டளை மூலம் கொடுத்துள்ளார்.

 

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.