குழந்தைகள் சிரிப்பில் இறைவனைக் காண்போம்…. Badulla Srilanka
பதுளையில் அமைந்துள்ள இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் மலையக சிறுவர் இல்ல சிறுமியருக்கு இன்று 21/11/2021 ம் நாள் லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்பாளின் பெயரினால் உணவு தானம் தந்துதவி, சிறுமியரின் பசியாற்றிய திரு. வல்லிபுரநாதன் ஐயா அவர்களுக்கு மலையக சிறுவர் இல்ல குழந்தைகளினதும், நிர்வாகத்தினதும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும், லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை பொது பணிகளுக்காக தம்மை ஈடுபடுத்தி பல்வேறு திட்டங்களை நிறைவேற்று அதனூடாக தாயக தொப்புள்கொடி உறவுகளுக்கு உறுதுணையாக இருக்கும் ஆலய அறக்கட்டளை அறங்காவலர் சபையினருக்கும், நிர்வாக சபையினருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டவர்கள் ஆவோம்.
இலங்கையில் மலையகத்தில் சிறுவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன ஒரே ஒரு சிறுவர் இல்லம் இலண்டன் சிறீ கனக துர்க்கை அம்மன் மலையக சிறுவர் இல்லம் என்பதுடன் அதனை ஆரம்பித்து வைத்த அந்நாள் முதல் இன்றுவரை அதன் அனைத்து பணிகளிலும் எம்முடன் கைகோர்த்து நிற்கும் நிர்வாக சபைத் தலைவர் கௌரவ கருணைலிங்கம் ஐயா அவர்களுக்கும் எம்முடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
குழந்தைகள் சிரிப்பில்… இறைவனைக் காண்போம்…
நன்றி
வணக்கம்.
கிருஷ்ணசாமி காண்டீபன்,
பொறுப்பாளர்,
மலைகள் சிறுவர் இல்லம்,
பதுளை.