Our Fond Memories of Late Mr Selvathurai Manoharan
SNK UK Trust Working as “PREM TRUST”
29th December 2023
Our Fond Memories of Late Mr Selvathurai Manoharan
It is our great pleasure of having as one of our trustees of Saivanerrikoodam (SNK UK Trust) from the formation of our Trust until his retirement last year. Some of his work with SNK UK as we recall are as follows :
1) He introduced in London , a “Nandi” of Lord Siva Flag to all temples and collected donations to fund the Saivanerrikoodam students of teaching our Saiva culture, conducting Examinations and Prize Giving to the successful students.
2) He was successfully conducting Saiva Examinations for 15 years and earned a “Saivachchemal “an honorary award at his retirement .
3) He was like the other Saivanerrikoodam trustees argued in numerous stage platforms for our Tamil Language to be practiced in our temples.
4) He was a Treasurer in Tharmapuram , Killinochi and ran a campaign to give lunch , clothing’s and students needs
.
5) Also donated chairs and mattresses to the charity of “ Namasivaya “ trust in Tharmapuram
அமரர் செல்லத்துரை மனோகரன் அவர்கள், எங்களுடன் இணைந்து உலகப் பேரவைக்கு ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்காது. அந்த வகையில்
அ) சிவராத்திரி தினத்தை கொடிதினமாக அறிவித்துச் சைவ சின்னமாகிய நந்திக்கொடியை எல்லா ஆலயங்களுக்கும் சென்று உண்டியல்களின் மூலம் விற்பனை செய்து வரும் பணத்தின் ஊடாக , பிள்ளைகளின் சமய அறிவை மேம்படுத்த ,சமய வகுப்புகள் ,பரீட்சைகள் ,பரிசளிப்பு விழா என்பவற்றுக்குப் பயன் படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு சமயத்தையும், பண்பாட்டையும் வளர்க்க அரும் பாடுபட்டார் .
ஆ) லண்டனில் பதினைத்து வருடங்களாக சமயப் பரீட்சைகளை நான்கு இடங்களி்ல் நடத்தியவர். இவர் தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்று திரு .தனபாலசிங்கம் இரத்தினவடிவேலிடம் ஒப்படைத்தார் .இவருக்கு சைவச்செம்மல் எனும் கௌரவப் பட்டத்தையும் பெற்றார் .
இ)கனக துர்க்கையம்மன் (S . K T )யின் ஆயுள் உறுப்பினராக இருந்து ,அங்கத்தவர்கள் தெரிவில் தனது வாக்குரிமையைச் செவ்வனே செய்தார் .
ஈ) சைவ நெறிக்கூடத்துடன் இணைந்து தமிழ் ஆலயங்களில் , தமிழில்த் தான் வழிபாடுகள் நடைபெற வேண்டும் என்று பல மேடைகளிலும் ,தொலைக்காட்சிகளிலும் உரையாற்றியதும் மட்டும் அல்லாது ,நான்கு ஆலயங்களில் தமிழ்க் குடமுழுக்கையும் கண்டு மகிழ்ந்தார் .
உ)கிளிநொச்சி தர்மபுரத்தில் அமைந்துள்ள சைவநெறிக்கூடம் *பிரேமச்சந்திரா அறக்கட்டளை*யில் ஓர் அரன் காவலராக இருந்து ,தனிப்பட்ட முறையில் அங்கு கல்விகற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு , உடைகள் என்பவற்றைக் கொடுத்துதவியவர்.
ஊ) தருமபுரத்தில் இயங்கும் *நமசிவாய*என்ற முதியோர் இல்லத்திற்கு நாற்காலிகள், மெத்தைகள் என்பவற்றை வேண்டி அன்பளிப்புச் செய்தார் .
எ) இலங்கையில் பெற்றுக் கொள்ளும் தனது ஒரு வருட ஓய்வூதியப் பணத்தை நல்லூரில் இருக்கும் வேலன் சுவாமிக்கு சமயப் பணிக்காகப் பயன்படுத்து மாறு வழங்கினார் .
இவ்வாறு மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்த மாமனிதர் . ஜெர்மனி சென்று தன் தனையன் தோள் சாய்ந்து இறையடி சேர்ந்தார் .
உடல் மண்ணிற்கும் உயிர் தமிழிற்கும் என்று உரக்கச் சொல்வோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இங்கனம்
திருமதி வசந்தாதேவி பிரேமச்சந்திரா
சைவநெறிக்கூடம் லண்டன்
பிரேம் அறக்கட்டளை