Uncategorized

Our sincere thanks to the donors & Supporters

கடந்த வருடம் இங்கிலாந்தில் இருந்து, உடைகள், பாடசாலைப் பொருட்கள், பேனா கொப்பி என்பன பிறேம் அறக்கட்டளை ஊடாக 5 பெட்டிகள்(boxes) நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது. அதில்

1)ஒரு பெட்டி வருத்தலைவிளான் வாழ் மக்களுக்கு, திரு .ஸ்ரீதரன் பூரணலிங்கம் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.

2)இரண்டு பெட்டிகள் ஹரி போல் சதுக்கம் (Hari Bol Square )இன் உரிமையாளர் திரு. தவராச துவாகரன். அவர்கள் மூலம் மருதனாமடம் வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.

3) இரண்டு பெட்டிகள் திருமதி .காயத்திரி விக்ரமசிங்க ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இப் பொதுச் சேவைக்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் பிறேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பெட்டிகளை உரிய முறையில் தயார்படுத்த உதவி புரிந்த திரு ,திருமதி ஞானேஸ்வரன் கௌரி அவர்களுக்கும் பிறேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இங்கிலாந்தில் வசிக்கும் திருமதி செல்வராணி அவர்கள் எமக்கு நன்கொடையாக ஆடைகளை வழங்கி உதவி செய்தார் அவற்றினை சந்நதியில் இயங்கும், சன்னதியான் ஆச்சிரமத்தின் உரிமையாளர் திரு . செந்தில் வேல் மோகனதாஸ் ஊடாக பதுளை வாழ் மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பிரேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நன்றியினைத் தெரிவித்து கொள்கின்றனர்.

இங்ஙனம் திருமதி: பிரேம்சந்திரா வசந்தாதேவி

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.