கிளி/கணேசபுரம் சனசமூக நிலையத்தின் ஊடாக பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு…
மேனாள் கல்விப்பணிப்பாளர் மதிப்புக்குரிய முருகவேல் அவர்களின் அன்பு நண்பர்களின் நிதி பங்களிப்பின் சார்பாக இப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டான.இவ் நிகழ்வில் கரைச்சி பிரதேச சனசமூக நிலையங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பங்கேற்பு…
“நாங்களும் பொங்குவோம்” என்ற தொனிப்பொருளில் இன்று 90 பயனாளிகளுக்கு பொங்கல்பானை,பொங்கலுக்கு தேவையான உணவுப்பொருட்கள் என்பன ஆதாரம் இளைப்பாறும் மண்டபத்தில் வைத்துவழங்கிவைக்கப்பட்டன.மேலும் வைத்தியசாலைப்பணிப்பாளர் அவர்களால் செந்தில் குமரன் நிவாரணம் அமைப்பினால் வழங்கப்பட்ட உடுப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன கிட்னி நேயாளிகள்,மற்றும் மாதாந்தம் உதவிகளைப்பெறும் பயனாளிகளும் இங்கு உள்ளடக்கப்பட்டனர்.
திரு சி.கிருஷ்ணபிள்ளை Swiss, மேலும் பிறேம்அறக்கட்டளை ஊடாக இரவீந்திரகுமார் பாலசிறீ கனடா 55000.00உம் ,சிறீ ரஞ்சன் பவானி மற்றும் நந்தினி வசந்தகுமாரன் swiss 65000.00 பண உதவிகளால் “நாங்களும் பொங்குவோம் ” என்ற எண்ணக்கருவை செயற்படுத்த முடிந்துள்ளது.
மிக்க நன்றிகள் கொடையாளி அன்பு நெஞ்சங்களே.